வரவு செலவு திட்டம் 2026 தொடர்பான முக்கிய அறிவிப்புகள்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்தார். வரவு செலவு திட்டத்தில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
👉CDC பற்றுச்சீட்டு: அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 2027 ஜனவரியில் S$500 வழங்கப்படும். 👉வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகை: ஆண்டுக்கு S$100,000 அல்லது அதற்குக் குறைவாக சம்பளம் பெறுவோருக்கு S$200 முதல் S$400 வரை ஒருமுறை வழங்கப்படும்.
👉Child LifeSG தொகை: 12 வயது அல்லது அதற்குக் குறைந்த பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு ஜூலை மாதம் S$500 வெள்ளி வழங்கப்படும் 👉பாலர்பள்ளி மானியம்: குடும்ப வருமான உச்சவரம்பு 12,000 வெள்ளியிலிருந்து 15,000 வெள்ளியாக உயர்வு. 👉CPF நிரப்புத் தொகை: அடிப்படை ஓய்வூதியத் தொகை இல்லாத 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 1,500 வெள்ளி வரை கிடைக்கும். 👉 புதிய CPF முதலீட்டுத் திட்டம்: ஓய்வுகாலச் சேமிப்பை அதிகரிக்க புதிய வாய்ப்பு. 👉 நிறுவன வருமான வரிக் கழிவு: 40% வரை அதிகபட்சம் 30,000 வெள்ளி. 👉 வெளிநாட்டு விரிவாக்க மானியம்: SME-க்களுக்கு 70% ஆகவும் பிற நிறுவனங்களுக்கு 50% ஆகவும் கிடைக்கும்.
👉EP குறைந்தபட்ச சம்பளம்: 5,600 → 6,000 வில்லியாக உயர்வு 👉 S Pass குறைந்தபட்ச சம்பளம்: 3,300 → 3,600 வெள்ளியாக உயர்வு. 👉 உள்ளூர் ஊழியர் தகுதி சம்பளம்: 1,600 → 1,800 வெள்ளியாக உயர்வு. 👉 தேசிய AI மன்றம்: பிரதமர் தலைமையில் one-north பகுதியில் புதிய AI வளாகம் அமைக்கப்படும். 👉 AI Tools இலவசம்: குறிப்பிட்ட AI பயிற்சியில் சேரும் சிங்கப்பூரர்களுக்கு 6 மாதங்கள் உயர்தர கருவிகள் இலவசம். 👉 SkillsFuture & Singapore Workforce இணைப்பு: திறன் மேம்பாட்டுக்கு ஒருங்கிணைந்த அமைப்பு.
👉 புகையிலை வரி உயர்வு:அனைத்து புகையிலைப் பொருட்களுக்கும் 20% கூடுதல் வரி. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.