தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்ல சிறந்த பர்மிட் எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்ல சிறந்த பர்மிட் எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த பர்மிட் எது? என்று ஒரு கேள்வி உள்ளது. அது எதன் அடிப்படையில் என்றால் வேலை, சம்பளம் மற்றும் ஏஜெண்டுக்கு கட்டும் தொகையை பொருத்தது.

மேலும் நீங்கள் எந்த பர்மீட்டில் செய்கிறீர்கள் என்பதை பொருத்தும் வேலைவாய்ப்பு நிர்ணயிக்கப்படும்.

முன்பெல்லாம் சிங்கப்பூர் செல்வதற்கு சிறந்த பர்மிட் E.pass  ஆகத்தான் இருந்தது.

ஆனால் இப்பொழுது இந்த பாசில் நீங்கள் செல்லும் பொழுது அதிகமானோரை சிங்கப்பூர் இமிகிரேஷன்(ICA) இல் இருந்து திருப்பி அனுப்புகிறார்கள். அதனால் தற்பொழுது இதில் செல்வதை அனைவரும் தவிர்த்து வருகிறார்கள்.

அதேபோல் இப்பொழுது E.Pass ல் செல்பவர்களுக்கு அதிக சம்பளம் அவர்களது விசாவில் போடுவதால் வருடத்தின் முடிவில் அவர்கள் கட்ட வேண்டிய வரித்தொகை மிகவும் அதிகமாக உள்ளது. அவர்கள் மாத சம்பளத்தில் இரண்டு மடங்கு வரியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதனால் தற்பொழுது இது சிறந்த பர்மிட்டாக இல்லை.

அதற்குப் பதிலாக தற்பொழுது சிறந்த பர்மிட் ஆக அனைவராலும் கூறப்படுவது S Pass மற்றும் NTS permit ஆகும். இதில் செல்பவர்கள் யாரும் சிங்கப்பூர் இமிகிரேஷன்-ல் இருந்து திருப்பி அனுப்பப்படுவதில்லை.

அது மட்டுமல்லாமல் இந்த பாசில் சென்றால் சிறந்த சம்பளமாக கிடைக்கிறது. அதேபோல் இதில் அதிகபட்ச வேலையும் நல்ல வேலையாக இருக்கும். இதனாலேயே இது ஒரு சிறந்த பர்மிட் ஆகவும் இருக்கிறது.

ஆனால் இதில் வேலை கிடைப்பது அதிகமாக முன் அனுபவம் இருப்பவர்களுக்கே கிடைக்கிறது.

உங்களுக்கு முன் அனுபவம் இல்லை, பெரிதாக நீங்க படிக்கவில்லை என்றால் உங்களுக்கு சிறந்த பர்மிட் என்றால் PCM மற்றும் Work permit ஆகும்.

நீங்கள் work permit-ல் வரும் பொழுது டெஸ்ட் அடிப்பது போல் வந்தால் மேலும் சிறப்பு.

இது போன்ற தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு நமது இணையதள பக்கமான www.sgtamilan.com என்ற பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK