அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??

அகமதாபாத் : அமெரிக்காவில் இந்தியர் ஒருவக்கு ரூ.15 கோடி (US$1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்த அபராதத்தை விதித்துள்ளது.

மெக்சிகோ எல்லை வழியாக 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் அந்த தொழிலதிபர் நுழைந்துள்ளார். ஆகையால் அங்கு பிடிபட்டு, சில வாரங்களிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அடுத்த ஆண்டு அவர் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் அவர் குடிநுழைவுத் துறையிடம் சிக்காமல் தலைமுறையாக இருந்துள்ளார். அமெரிக்காவிலேயே தொழில்களைத் தொடங்கி அங்கு வாழ்ந்தும் வந்துள்ளார்.

பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளையும் அவர் வந்த வழியிலேயே அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் U-VISA முறைக்கு விண்ணப்பித்திருந்தார். அதனால் தற்போது அவர் வேலை அனுமதி அட்டையும், சமூக பாதுகாப்பு எண்ணையும் பெற்றுள்ளார்.

இருப்பினும் பல ஆண்டுகளாக வெளியேற்ற உத்தரவை மதிக்காமல் தங்கியிருந்ததற்காக அவருக்கு இந்த பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அவர் தங்கி இருந்த ஒவ்வொரு நாளுக்கும் தலா US$998 (ரூ.94,000) என்ற வீதத்தில் கணக்கிடப்பட்டு இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அந்த நபருக்கு 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK