வாக்களிக்க Booth Slip அவசியமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்..!!
கேள்வி: முதல் முறை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது? வாக்குப் பதிவு எவ்வாறு நடைபெறும்? பதில்: வாக்கு சாவடிக்குள் நுழைந்த உடன் முதல் நிலை வாக்குச்சாவடி அலுவலர் உங்களின் பெயர் மற்றும் அடையாள ஆவணத்தை சரி பார்ப்பார். இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் கையொப்பம் பெற்று, கையில் மை வைத்து, நீங்கள் வாக்களிப்பதற்கான சீட்டை வழங்குவார்.
மூன்றாவது வாக்குச்சாவடி அலுவலரிடம் அந்த சீட்டை வழங்கிய பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்களின் வாக்கினை நீங்கள் பதிவு செய்யலாம்.
கேள்வி: வாக்களிக்கச் செல்வதற்கு Booth Slip அவசியமா?
பதில் : கட்டாயம் இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும்.
கேள்வி : வாக்காளர் அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியுமா? வேறு என்ன ஆவணங்களை பயன்படுத்தலாம்? பதில் : வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதுமானது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
கேள்வி : தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணங்கள் எவை? பதில் : ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்புக், பாஸ்போர்ட், ஒட்டுநர் உரிமம், ஓய்வூதிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் போதுமானது.
கேள்வி : என் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? பதில்: voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது ECINET செயலி மூலம் வாக்குச்சாவடியை அறியலாம்.
கேள்வி: வாக்களிக்கச் செல்லும் போது செல்போனை எடுத்துச் செல்லலாமா? பதில் : வாக்குபதிவு மையத்தினுள் செல்போன் எடுத்துச் சென்று படம் பிடிக்க அனுமதி இல்லை.
கேள்வி : EVM இயந்திரத்தில் வேட்பாளர் வரிசை எந்த அடிப்படையில் இருக்கும்? பதில் : அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள், பதிவு செய்ப்பட்ட கட்சிகள், சுயேட்சைகள் என அகர வரிசையில் இடம் பெறும்.
கேள்வி: நான் அளித்த வாக்கு சரியாக பதிவாகியுள்ளது என்பதை எப்படி உறுதி செய்வது? பதில்: வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தியவுடன் VVPAT இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னத்துடன் சிறிய காகிதச் சீட்டு 7 விநாடிகள் தோன்றும்.
கேள்வி : வாக்களித்த பின் விரலில் வைக்கப்படும் மையை அழிப்பது குற்றமா? பதில் : விரலில் வைக்கப்படும் மை-ஐ அழிப்பது எளிதான காரியம் அல்ல, அதையும் மீறி அத்தகைய செயலில் ஈடுபட்டால் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட முயன்றதாக கருதப்படும்.
கேள்வி : என் வாக்கை வேறு யாரேனும் போட்டிருந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? பதில் : வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையிட்டு 49 ஓ படிவம் மூலம் வாக்களிக்க முடியும்.
கேள்வி : எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? பதில் : வாக்காளர் இயந்திரத்தில் கடைசியாக உள்ள நோட்டாவிற்கு வாக்களிக்கலாம்.
கேள்வி: இருமுறை பொத்தானை அழுத்தினால் இரு வாக்குகள் பதிவாகுமா? பதில் : அவ்வாறு செலுத்த முடியாது. அப்படி அழுத்தினால் அந்த வாக்கு செல்லாத வாக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
கேள்வி: வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால் வாக்களிக்க முடியுமா? பதில்: முடியாது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். எனவே மாலை 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிக்கு வருபவர்களுக்கு மட்டுமே டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
வாக்களிப்பது ஜனநாயக கடமை..!! ஜனநாயக கடமையை சரியாக செய்வது, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை ஆகும்.