சிங்கப்பூரில் வதந்தியால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்..!! விளக்கம் அளித்த ஜாஜிஹா..!
சிங்கப்பூரில் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய ஃபெசாவர் (Piloxing) பயிற்சியாளர் தொடர்பான சர்ச்சையில், சம்பந்தமில்லாத ஒரு பெண் தவறாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வேகமாகப் பரவிய நிலையில், அந்தப் பெண்ணை சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உண்மை உறுதி செய்யப்படாத தகவல்களைப் பகிர்வதும், ஆதாரமின்றி யாரையும் குற்றம் சாட்டுவதும் அப்பாவி நபர்களின் வாழ்க்கை மற்றும் நற்பெயருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பி அல்லது பகிர்ந்து தேவையற்ற குழப்பத்தை உருவாக்க வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பாமல், உண்மை வெளிவரும் வரை பொறுமையுடன் இருக்குமாறும் ஜாஜிஹா கேட்டுக்கொண்டுள்ளார்.