சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியதாக சந்தேகப்படும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நாளை (மே 10) மற்றும் அடுத்த மாதம் (ஜூன் 4) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)அறிவித்துள்ளது.

இது குறித்த செய்தியை நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட சட்டவிராத நடவடிக்கைகள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் LTA குறிப்பிட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் 56 வயதான உள்ளூர் வாசி ஒருவர் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டிற்கு உடந்தையாக இருந்ததற்காகவும், போலியான அடையாளபக் குறியீடுகளைக் காட்சிப்படுத்தியதற்காகவும், பதிவு செய்யப்படாத மற்றும் காப்பீடு செய்யப்படாத வாகனங்களின் பயன்பாட்டை அனுமதித்ததற்காகவும் அவர் மீது நாளை
(மே 14)நீதிமன்றத்திற்கு குற்றம் சாட்டபட உள்ளது.

மேலும் இரண்டு வழக்குகளில் உள்ள சந்தேக நபர்கள் 63 வயது மற்றும் 62 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த நபர்கள். இவர்கள் இருவர் மீதும் அடுத்த மாதம் (ஜூன் 4) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.

63 வயதான அந்த நபர் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியதற்காகவும், அவற்றை பயன்படுத்த அனுமதித்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட உள்ளார். மேலும் விசாரணையில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் சிங்கப்பூரில் தரைவழி எல்லைகளை மீண்டும் மீண்டும் கடந்துள்ளது தெரியவந்துள்ளது.

மூன்றாவது நபரான 62 வயதுடையவர் பதிவு நீக்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்துதல், போலி அடையாளக் குறியீடுகளை வாகனங்களில் பயன்படுத்துதல் மற்றும் பதிவு செய்யப்படாத மற்றும் காப்பீடு செய்யப்படாத வாகனத்தை பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட உள்ளார்.

வாகனப் பதிவை ரத்து செய்யும்போது வாகன உரிமையை மாற்றுவது மற்றும் OneMotoring இணையதளத்தில் வாங்குபவர் பரிவர்த்தனையை உறுதி செய்வது உள்ளீட்ட அனைத்து நடைமுறைகளையும் வாகன உரிமையாளர்கள் உரிமையாளர்கள் சரிபார்க்க வேண்டும் என்று LTA வலியுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK