பண மோசடி வழக்கில் சிங்கப்பூரில் கைதான மலேசிய பெண்..!! நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!!
சிங்கப்பூர்: ஏப்ரல் 28ஆம் தேதி ஆங் மோ கியோ பாயிண்ட் வணிக வளாகத்திற்குள் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பெரிய தொகை பணத்தைக் கொடுப்பதை அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் சிசிடிவி காட்சிகளின் மூலம் பார்த்துள்ளார்.
இந்த தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்தியவுடன் நேற்று (ஏப்ரல் 29) காவல்துறையினர் இது குறித்த செய்தியை அறிக்கையில் வெளியிட்டது. சந்தேகம் ஏற்படும் படியாக அந்த சூழ்நிலையின் போது தோன்றிய காரணத்தினால் பாதுகாப்பு ஊழியர் காவல்துறையை அழைத்து தகவல் தெரிவித்ததாக அறிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆங் மோ கியோ காவல் நிலையம் மற்றும் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பிறகு அந்த நபர் ஒரு பண மோசடி வழக்கால் பாதிக்கப்பட்டவர் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். மேலும் இந்தியில் சம்பந்தப்பட்ட பெண் பணத்தை கடத்துபவராக இருந்திருக்க கூடும் என அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்
முதற்கட்ட விசாரணையின் போதும் பாதிக்கப்பட்டவர் இந்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் ஒரு முதலீட்டு குழுவில் சேர்க்கப்பட்டார் எனவும், அந்த முதலீட்டு வாய்ப்புகளும் ஒரு வர்த்தக தளத்திற்கான இணைக்கும் அதில் பகிரப்பட்டன என்றும் தெரிய வந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் முதலீடாக $10,000 ஐ ஒரு வங்கி கணக்கு இருக்கு மாற்றி உள்ளார். ஆனால் கூறியபடி லாபகரமான தொகையை எடுக்க முடியவில்லை அதன் பிறகு அவர் கூடுதலாக முதலீடு செய்ய முடிவு செய்து அடையாளம் தெரியாத நபர்கள் கூறியதற்கு இணங்க $50,000 என்ற தொகையை எடுத்து அதை ஆங் மோ கியோ சதுக்கத்தில் இருக்கும் ஒரு முதலீட்டு நிறுவனத்தின் ஊழியர் என்று கூறிக்கொண்ட ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மலேசிய பெண் மோசடி செய்பவர்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்று அடையாளம் தெரியாத நபர்களின் சொல்லிற்கு இணங்க செயல்பட்டு வந்ததும் விசாரணையின் போது தெரியவந்தது. இந்தப் பெண் ஏமாறுபவர்களிடமிருந்து பணத்தை வசூலித்து பின்னர் அதை மற்றவர்களுக்கு கொடுப்பது இவருடைய பணியாக இருந்தது.
இந்த குற்றச்செயல் மூலம் கிடைத்த வருமானத்தை மற்றவர்கள் தக்க வைத்துக் கொள்ள உதவும் வேலைக்கு உடந்தையாக இருந்த அந்தப் பெண் மீது இன்று (ஏப்ரல் 30) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 21 வயது மலேசிய பெண்ணிற்கு நீதிமன்றத்தில் இன்று(ஏப்ரல் 30) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பணம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பெறுவதில் மோசடி கும்பல்களுக்கு உதவியதற்காக சமீப காலமாகவே அதிக எண்ணிக்கையிலான(20) மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 30ஆம் தேதி முதல் மோசடி செய்பவர்கள் கும்பல் உறுப்பினர்கள் மீது குறைந்தபட்சமாக 6 முதல் அதிகபட்சம் 24 பிரம்படிகள் வரையிலான கட்டாயமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏமாற்று வேலை செய்பவர்களுக்கு பணத்தை சட்டவிரோதமாக மாற்றுவதற்கோ அல்லது மோசடி மூலம் கிடைத்த வருமானத்தை மாற்றுவதற்கு உதவியவர்களுக்கும் 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம். பணம் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வங்கி சேவைகள் மற்றும் கைபேசி பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடலாம். மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.