சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய இளைஞருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்: Sembcorp Marine கப்பல் கட்டும் தளத்தில் உள்ள கழிவறையில் பல ஆண்களை ரகசியமாக படம் பிடித்தக் குற்றத்திற்காக மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 6 வாரச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜதவரம் ராகவன் எனும் 26 வயதுடைய மலேசியர். மறைந்திருந்து நோக்குதல் மற்றும் தனிப்பட்ட உரிமை மீறல் ஆகிய குற்றத்திற்காக அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராகவனும் தான் செய்த குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கும்போது இரு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாதத்திற்குள் பல குற்றங்களைச் செய்துள்ளார். கழிவறைகள் இருந்த 4 ஆண்களை ரகசியமாக படம் பிடித்துள்ளார். அதில் ஒருவரின் அடையாளத்தை பாதுகாக்க அவரது பெயர் ஊடகங்களில் வெளியிட்ட வில்லை. மற்ற 3 ஆண்களின் அடையாளங்களும் தெரியவில்லை.

ஜனவரி 26 ஆம் தேதி காலை, Sembcorp Marine -ல் உள்ள ஒரு கட்டடத்தில் இருந்த ஆண்களுக்கானக் கழிவறைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர் நுழைந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் ஒருவர் ஒரு அறைக்குள் நுழைவதைக் கண்ட ராகவன் அருகில் உள்ள அறைக்கு சென்று அங்கிருந்து கைபேசி கேமராவை அந்த அறைக்குக் கீழே நீட்டி பாதிக்கப்பட்டவரை ரகசியமாக படம்பிடித்துள்ளார்.

அரையின் சுவரிலிருந்து கைபேசி வெளியே நீட்டி கொண்டிருப்பதை கவனித்தவர் உடனே கத்தியுள்ளார். அதனைக் கேட்ட ராகவன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்பு ஒரு கட்டிடத்தின் உணவகத்தில் ராகவனைக் கண்டுபிடித்து அவரது கைபேசியைக் காட்டும்படி கேட்டபோது , அதில் ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட மேலும் சில 3 ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட காணொளிகளும் இருந்தது.

காவல்துறையினர் விசாரிக்க நேரிடும் என்று உணர்ந்த ராகவன் தனது கைபேசியில் இருந்து அந்த 4 காணொளிகளையும் அழித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு எதிரான தனிஉரிமை மீறலின் அளவையோ அல்லது அவர்களை அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்பட்டதா என்பதையோ கண்டறிய இயலவில்லை என்று குறிப்பிடுகின்றன.

இந்த குற்றத்திற்காக அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட தண்டனைகள் ஏதேனும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK