சாலையோரம் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்..!! ஓட்டுநர் நிலை என்ன..??

சாலையோரம் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்..!! ஓட்டுநர் நிலை என்ன..??

செராங்கூன் பகுதியில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டதை SGROAD BLOCK என்ற TELEGRAM குழுவில் பதிவிட்டிருந்தனர்.

அப்பதிவில் ஆங் மோ கியோ அவென்யூ 3 இல் இருந்து ஹவுகாங் அவன்யூ 1 செல்கின்ற சாலையில் அடர் நீல நிற கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது காணொளியின் மூலம் தெரிய வந்தது.

கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் கவிழ்ந்தது. மேலும் கார் ஓட்டுநர் உட்பட பலரும் ஓட்டுனரின் நிலையைக் காண விரைந்து சென்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதையை பொருட்படுத்தாமல் கார் ஓட்டுநர் காரில் ஏறி ஓட்டி சென்று விட்டார்.

அவரது காரின் முன் இடது சக்கரம் சேதமடைந்தது மேலும் வாகனம் ஓட்டும் போது கார் புகழ்ந்து கொண்டிருந்தது வீடியோ பதிவில் தெரிய வருகிறது. ஆனாலும் அதை கண்டும் காணாமல் ஓட்டுநர் தொடர்ந்து காரை இயக்கி செல்வதில் தீவிரம் காட்டியுள்ளார்.

இது குறித்த தகவலானது காவல்துறைக்கு நேற்று (ஏப்ரல் 3) காலை சுமார் 12:40 மணி அளவில் தகவல் கிடைத்ததாகவும், தகவல் கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பார்வையிட்டபோது கார் ஓட்டுனர் தப்பி சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையினர் தீவிர தேடுதலுக்கு பிறகு, மது போதையில் வாகனம் ஓட்டியதாக 46 வயது ஆண் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியவர் 38 வயதைச் சேர்ந்த ஆண் என்பது தெரியவந்துள்ளது. சிறிது காயங்களுடன் அவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK