தேசிய நூலக வாரியம் - 2025 வருடாந்திர நிகழ்ச்சி..!!!
வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலில் வேலை செய்யும் பெரியவர்களுக்கு உதவும் வகையில் Thrive@Libraries 2025 நிகழ்ச்சி அமையும். மேலும் இந்நிகழ்ச்சியானது பெரியவர்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேசிய நூலக வாரியம், ஸ்கில்ஸ் பியூச்சர் சிங்கப்பூர், வாழ்நாள் கற்றல் நிலையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று முதல் (16 ஆம் தேதி) செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தேசிய நூலக வாரியத்தின் Thrive@Libraries 2025 வருடாந்திர நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வெவ்வேறு நூலகங்களிலும் இணைய தளத்திலும் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பத்துக்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களும் பட்டறைகளும் நடைபெற இருக்கின்றன.