இந்தப் போட்டியில் கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் 54- 42 என்ற புள்ளி வித்தியாசத்தில் சிங்கப்பூர் தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டும் (2024) நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் கென்யாவிடம் தோல்வியை சந்தித்தது.
அதே சமயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 7ஆம் தேதி மலேசியா சிங்கப்பூர் இடையே போட்டி நடந்தது. இதில் சிங்கப்பூர் அணியானது 68- 39 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவே வீழ்த்தியது.
இந்த நேஷனல் கின்னஸ் போட்டியானது கிட்டத்தட்ட ஒரு வாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற அணிகள்: கென்யா, மலேசியா, ஐல் ஆப் மேன், பாப்புவா நியூ கினி மற்றும் சிங்கப்பூர்.
வலைப்பந்து போட்டி தரவரிசையில் 22 வது இடத்தில் சிங்கப்பூர் அணி இருந்தது.
தோல்வி தழுவினாலும் நம்பிக்கையை விடாத சிங்கப்பூர்: சிங்கப்பூர் பெண்கள் அணியினர் இதற்கு முன்பாக 2015 ஆம் ஆண்டு நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் பிறகு நடந்த போட்டிகளில் தங்கம் வெல்ல தவறிவிட்டது.
இதுகுறித்து பயிற்றுவிப்பாளர் தாரா ஸ்டீல் தெரிவித்துள்ளது: “கடந்தாண்டு(2024) ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை நாங்கள் வென்றுள்ளோம். இதனால் இம்முறை தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது”.
2017, 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது மலேசியாவிடம் தங்கத்தை பறி கொடுத்தது சிங்கப்பூர். 2022, 2023 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வலைப்பந்து போட்டியை இடம்பெறவில்லை.