சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் ஒழுங்குக்கான புதிய கட்டுப்பாடுகள்…!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களின் ஒழுங்கற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எச்சரிக்கை பலகைகள் மூலம், இதுவரை 160 க்கும் மேற்பட்ட விதிமீறல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை பலகை:
👉 செல்போன் பயன்படுத்தும் போது குரலை குறைத்தல்,
👉 ரயில் தரையில் அமர்வதற்கு தடை
👉 ஒருவருக்கு மேற்பட்ட இருக்கைகள் பிடிக்காமை ஆகியவற்றை நினைவூட்டுகின்றன.
CNA வெளியிட்ட தகவலின்படி,டிசம்பர் 2023 முதல் மே 2024 வரையிலான காலப்பகுதியில், முந்தைய ஆறு மாதங்களை விட நான்கு மடங்கு அதிகமாக விதிமீறல் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பயணிகள் விதிமீறல் தொடர்பான செயல்களில் ஈடுபடும் பொழுது கீழ்க்கண்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
🔹 ஒவ்வொரு மீறலுக்கும் $500 வரை அபராதம் 🔹 கடுமையான விதி மீறல்களுக்கு $5,000 வரை அபராதம் 🔹 ரயிலில் இருந்து இறக்க உரிமை காவல்துறையிடம் ஒப்படைக்கும் அதிகாரம் – போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
SMRT & SBS ரயில்கள் – பெரும்பாலானவற்றில் புதிய எச்சரிக்கை பலகைகள் ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ளன.மேலும் புதிய R151 ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும். டவர் ட்ரான்சிட் பேருந்து நிலையங்களிலும்,19 புதிய ஒழுங்கு விதிமுறைகள் தகவல் பலகைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
🟢 இ-டவுன்: இதுவரை எச்சரிக்கை அல்லது அபராதங்கள் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்தில் ஒழுங்கான பயணத்தை ஊக்குவிக்கும் புதிய முயற்சிக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.