சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ விளையாட்டு பட்டியலில் சேர்ந்துள்ள விளையாட்டுகள் என்னென்ன?

சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ விளையாட்டு பட்டியலில் சேர்ந்துள்ள விளையாட்டுகள் என்னென்ன?

சிங்கப்பூரில் சில காலமாக சில விளையாட்டுகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கலாச்சார சமூக இளையர் துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நீயோ என்பவர் புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று (05/11/2025) தாக்கல் செய்துள்ளார்.

எந்த விளையாட்டுக்காக புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது?
👉 சதுரங்கம்
👉e-sports
👉Bridge

சிங்கப்பூர் முக்கிய அனைத்து உலக e-sports விளையாட்டு நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

The International 2022 விளையாட்டுப் போட்டி இதில் ஒன்று. தென்கிழக்கு ஆசியாவில் வந்த மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வை நடத்திய முதல் நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

2023- ஆம் ஆண்டு சிங்கப்பூர் முதல் Olympic Esports வாரத்தை நடத்தியுள்ளது.

சதுரங்கம் போன்ற விளையாட்டுகளும் சிங்கப்பூரில் தற்போது பிரபலமாகி வருகின்றது.

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற 75வது தேசிய பள்ளிகளுக்கான தனிநபர் சதுரங்க போட்டியில் 1606 இளையர்கள் பங்கேற்றனர்.

2022 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது அது சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு 2024 சிங்கப்பூர் முதன்முறையாக உலக சதுரங்க போட்டி நடத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK