தலைமை சட்ட அதிகாரியும் தலைமை சட்ட அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றுவோரும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட காரணத்திற்காக இவர் அடிப்படை இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால் அதே ஆண்டில், திரு ரவி அவர்களை மனித உரிமை வழக்குகளில் செய்த அறப்பணிக்காக அனைத்து உலக சட்ட அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.
திரு ரவி அவர்களின் இறப்பு குறித்து அவருடன் நெருக்கமாக பணியாற்றிய வழக்கறிஞர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
“திரு ரவி அவர்கள் இலவசமாக சட்ட சேவை வழங்குவதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் மிகவும் நல்ல நண்பர்” என கூறினார் யூஜின் துரைசிங்கம்.
“திரு ரவி அவர்கள் என்னுடைய முன்மாதிரி மேலும் அவர் என்னுடைய தந்தையிடம் பேசிய பிறகு சட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது” என்று திரு அரிஃபின் கூறினார்.
சட்டத் தொழிலில் கால் பதிக்க திரு ரவி அவர்களை முக்கிய காரணம் எனவும் அரிஃபின் கூறினார்.