சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான ” பேப்பர் மார்க்கெட்” கடை மூடல்..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் செலவுகள்..!! 20 ஆண்டுகள் பழமையான " பேப்பர் மார்க்கெட்" கடை மூடல்..!!

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் எழுதுபொருள், மற்றும் வாழ்க்கை முறை பிராண்டான “பேப்பர் மார்க்கெட் ” தனது நேரடி கடைகளை மூட உள்ளதாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக இந்த மாத இறுதியில் கடைகளை மூடிவிட்டு தனது வணிகத்தை இணைய வழிக்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

பேப்பர் மார்க்கெட் சென்ற மாதம் (ஏப்ரல்) 30-ஆம் தேதி அன்று சமூக வலைத்தளங்களில் இந்த அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் எழுதியதிலேயே இதுதான் மிகவும் கடினமான பதிவு. பல மாதங்களாக நடந்த கடினமான திரை மறைவுப் பேச்சுவார்த்தைகள் உட்பட, நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். ஆனால் அதிகரித்து வரும் செலவுகளால் இந்த சிறிய உள்ளூர் வணிகத்தை எங்களால் இனிமேலும் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருந்தது.

நாங்கள் கடையை மட்டுமல்ல அங்குள்ள மக்களையும் இழந்து வாடுவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது கடையை மூடும் விற்பனையை நடத்திய வருவதால் பல பொருட்களில் தள்ளுபடிகளை வழங்குகிறது.

இதில் பல பொருள்கள், தளபாடங்கள் மற்றும் காட்சி அலமாரிகள் போன்றவற்றிற்கு 70% தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. ஒரே ஒரு நேரடி கடை இப்போது கிரேட் வேல்டு சிட்டியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனமானது இதற்கு முன்பு ராஃபிள்ஸ் சிட்டி மற்றும் லயன் சிட்டி டவரில் தனது கிளைகளைக் கொண்டிருந்தது.

நேரடி கடைக்கு வந்த பிரியாவிடை கூறுவதற்கான இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பேப்பர் மார்க்கெட் தனது வாடிக்கையாளர்களை அழைத்துள்ளது.

பேப்பர் மார்க்கெட் பதிவில் நேரடி கடைகள் எப்பொழுது மூடும் என்ற தேதியை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், கடைகள் மே 31ஆம் தேதி திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இணையவாசிகள் அந்த பிராண்ட் மூடப்படுவதில் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் பேப்பர் மார்க்கெட் மீதான தங்களது அன்பைப் பகிரும் வகையில் அவர்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK