அதிர்ச்சி..!!!நிக்கோல் நெடுஞ்சாலையில் கார் விபத்து...!!!
சிங்கப்பூர்:நிக்கோல் நெடுஞ்சாலையில் இன்று (13.09.25) அதிகாலை நடந்த கார் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆன்லைனில் பரவி வரும் வீடியோவின்படி, கருப்பு நிற கார் ஒன்று திடீரென பாதசாரிகள் காத்திருந்த பகுதிக்குள் வேகமாக சென்று தெருவிளக்கின் மீது மோதியது.
இந்த விபத்தின் தாக்கத்தில் கார் பாகங்கள் மற்றும் குப்பைகள் சாலையில் சிதறி கிடந்தன. காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.
சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்ததாவது, இன்று அதிகாலை 1.50 மணியளவில், நிக்கோல் நெடுஞ்சாலை மற்றும் சிம்ஸ் நெடுஞ்சாலை சந்திப்பில் விபத்து நடந்ததாக தகவல் வந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு, டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.