தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தொடங்கிய பிரச்சாரம்..!!! ஏன்? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தொடங்கிய பிரச்சாரம்..!!! ஏன்? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர்: தேசிய சுற்றுச்சூழல் நிறுவனமானது நிறுவனங்களும் அமைப்புகளும் உணவு வீணாவதையும் ஒரு முறை மட்டும் பயன்படுத்திய பொருட்களை வெளிப்புறத்தில் போடுவதையும் தடுப்பதற்காக ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது.

இந்த புதிய முயற்சியை ஒரு பிரச்சாரம் போல தொடங்கியுள்ளது. இது 260க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் அமைப்புகளும் உணவுப் பொருட்கள் வீணாவதை குறைப்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபடும் என உறுதியளித்துள்ளது.

இந்த பிரச்சாரத்தில் 99 புதிய கூட்டாளர்களான அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை, பிரேசர்ஸ் சொத்து, கெயின் சிட்டி மற்றும் தென்கிழக்கு சமூக மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இந்த ஆண்டு (2025) இணைய உள்ளது.

இன்று முதல் (13/09/3025) கிளீன் அண்ட் கிரீன் சிங்கப்பூர் Youtube சேனலில் நான்கு பகுதிகளை கொண்ட ஆன்லைன் நேரடி தொடரை அதிகாரிகள் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா, கண்காட்சிகள், விளம்பரம், டிஜிட்டல் மற்றும் சமூக தளங்கள் மூலமாகவும் பள்ளிகள் மூலமாகவும் இந்த தகவலானது பொதுமக்களை சென்றடையும்.

ஷாப்பிங் பழக்கங்களை மறுபரிசீலனை செய்வதற்காக இந்த செய்திகள் வெளியிடப்படும் என செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு (2025) பிரச்சாரத்திற்கான தலைப்பானது “Say Yes, To Waste Less” ஆகும். இந்த பிரச்சாரமானது ஆண்டுதோறும் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் மூலமாக நடத்தப்படும்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

 
❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.