பீஷான் சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!

பீஷான் சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!

சிங்கப்பூர்:பீஷான் சாலை மற்றும் பீஷான் தெரு 11 சந்திப்பில் நேற்று காலை ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நடந்தது.

சிவப்பு விளக்கை மீறி சென்ற தனிநபர் நடமாட்ட சாதனம் (PMD) பயணி BMW காரில் நேருக்கு நேர் மோதியதில் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

ROADS.sg வெளியிட்ட வீடியோவில்,பாதசாரி சிக்னல் சிவப்பு இருந்தும் PMD ஓட்டுநர் சந்திப்பைத் தாண்ட முயன்றபோது,அருகில் மெதுவாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திடீரென நடுவில் நின்றார்.அந்த நேரத்தில் ஒரு நீல BMW கார் வந்து PMD-யை நேரடியாக மோதுகிறது.

இந்த விபத்தில் பயணி தூக்கி வீசப்பட்டு, பலத்த சத்தத்துடன் தரையில் விழுந்தது காட்சியில் தெளிவாக தெரிகிறது.இந்த விபத்துக்குப் பிறகு,கார் ஓட்டுநர் உடனே காரிலிருந்து இறங்கி,காயமடைந்த ஓட்டுநரின் நிலையைப் பார்த்து உதவ முனைந்தார்.

இந்த சம்பவத்துக்கான தகவலை நேற்று(10.12.25) காலை 7.35 மணிக்கு பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.41 வயது PMD ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்தபோதும், குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

43 வயது BMW கார் ஓட்டுநர் தற்போது காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK