அதிர்ச்சி..!!!காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு..!!!

அதிர்ச்சி..!!!காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல், தொலைத்தொடர்பு நிறுவனம் M1 மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) ஊழியர்கள் போல நடித்து பல மோசடிகள் அரங்கேறியது.

இது தொடர்பாக குறைந்தது 13 மோசடி சம்பவங்கள் குறித்து காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக S$362,000 இழந்துள்ளனர்.

காவல்துறை அறிக்கையின் படி,மோசடி செய்பவர்கள் M1 ஊழியர்களாக நடித்து, அவர்களிடம் நிலுவையில் உள்ள மொபைல் போன் அல்லது பார்சல் பில்ல்கள் இருப்பதாக கூறி, வாட்ஸ்அப்பின் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, சந்தா நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்துகிறார்கள். இதேபோல், MAS ஊழியர்களாக நடித்து, விசாரணைகளுக்கு உதவுவதற்காக அழைப்புகளில் பணம் மாற்றுமாறு சொல்லி, நம்பிக்கையில்லாத முறையில் பணத்தை கைப்பற்றுகிறார்கள்.

காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புடன் இருக்கும்படி மற்றும் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும்படி கீழ்காணும் அறிவுரைகளை வழங்கியுள்ளது:

👉அடையாளம் தெரியாத நபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்.

👉மொபைல் சாதனங்களின் திரை பகிர்வு (screen sharing) செய்ய வேண்டாம்.


👉சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் இது போன்ற மோசடி சம்பவங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்கவும் காவல்துறையை எச்சரிக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK