சுங்கத் துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில், பாண்டன் லூப் சாலை மற்றும் ஜூரோங் ஹார்பர் சாலை பகுதிகளில் இரு தனித்தனியான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் நடவடிக்கையில், பாண்டன் லூப்பில் உள்ள தொழில்துறை கட்டிடத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு வேன் வாகனத்தின் உள்ளும் அருகிலும் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூரர் ஒருவர் மற்றும் மூன்று இந்திய ஆண்கள் கைது செய்யப்பட்டனர். வேன் வாகனமும் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
அடுத்து, கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மறுநாள் ஜூரோங் ஹார்பர் சாலையில் உள்ள கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சி நடவடிக்கையிலும் கூடுதல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் 27 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.