2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு கிடைத்த முதல் பதக்கம்..!!!

2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு கிடைத்த முதல் பதக்கம்..!!!

சிங்கப்பூரில் உடற்குறைபாடு உள்ளவர்களுக்காக உலக கிண்ணம் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் சிங்கப்பூரை சேர்ந்த நீச்சல் வீராங்கனை யிப் பின் நியூ சிங்கப்பூருக்கு இந்த ஆண்டிற்கான முதல் வெள்ளி பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

இவர் 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் s2 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இந்த பிரிவில் யிப் நீந்துவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் சுமார் 2 நிமிடம் 24 வினாடிகள் ஆகும்.

இதற்கு முன் 2019, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தங்கப்பதக்கத்தை வென்ற யிப் மொத்தமாக இதுவரை 7 உலக பட்டங்களை வென்றுள்ளார்.

உலகப் போட்டியிலும் வெற்றியாளர் போட்டியிலும் 50 மீட்டர் 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியில் தொடர்ந்து சாதனை படைத்துள்ளார்.

 

WHATSAPP CHANNEL LINK👉