சிங்கப்பூரின் பெரிய வங்கி அதிக லாபம் ஈட்டியது..!!!
முழு விவரம் அறிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மிகப் பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியானது இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளது. நிகர லாபமானது, 1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
குழுமத்தின் நிகர வட்டி வருமானம் 2024 ஆம் ஆண்டை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று அது இலக்கு வைத்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு(2025) டிபிஎஸ் வங்கியின் இலக்கில் மாற்றமில்லை.
கடந்த ஆண்டு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது, இவ்வங்கியின் முதல் ஆறு மாத நிகர லாபம் ஒரு விழுக்காடு குறைந்து $5.72 பில்லியனாகப் பதிவானது.
நிகர கட்டண தரகுத் தொகை வருமானம் 17 விழுக்காடு உயர்ந்து $2.44 பில்லியன் எனப் பதிவானது.
லாபம் அதிகரிக்கக் காரணம் வலுவான சொத்துக் கட்டணங்கள், வர்த்தக வருமானம் ஆகியவற்றால் ஆகும்.
புளூம்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்தது யாதெனில் இம்முறை டிபிஎஸ் வங்கியானது $2.79 பில்லியன் ஈட்டும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கணித்ததை விட இவ்வங்கியானது இந்த ஆண்டு(2025) இரண்டாம் காலாண்டில் $2.82 பில்லியன் என்ற அதிக லாபம் ஈட்டியுள்ளது.
இந்நிலையில், டிபிஎஸ் வங்கியானது அறிவிப்பு ஒன்று விடுத்தது. ஒவ்வொரு பங்குக்கும் 60 காசு இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும். மேலும் முதலீடு செய்வோருக்கு ஒரு பங்குக்கு 15 காசு என்ற அடிப்படையில் ஈவுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) காலை 9:25 மணிக்கு டிபிஎஸ் பங்குகளின் மதிப்பானது 1.1 விழுக்காடு உயர்ந்து $49.37 பில்லியனாகப் பதிவானது.