தெம்பனிசில் நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! ஆடவர் கைது..!!

தெம்பனிசில் நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! ஆடவர் கைது..!!

தெம்பனிசில் உள்ள யு டேஸ்ட் என்ற காபி கடைக்கு அருகில் மாலை நேரத்தில் சுமார் 5:55 டிசம்பர் 19, 2025 அன்று கத்திக்குத்து சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் அதிகம் கூட்டம் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கண்மணிஸ் பெரு விரைவு நிலையத்திற்கும் பெம்பனீஸ் கடை தொகுதிகளுக்கும் இடையில் திறந்தவெளி சந்தை இருக்கும் கூடாரத்தின் அருகில் சத்தம் கேட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியள்ளனர்.

பிறகு ரத்தம் படிந்த சட்டையுடன் ஆடவர் ஒருவர் இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது கத்திக்குத்து வாங்கிய திரு முகமது ஹைரில் பெயிண்சைக் சுயநினைவுடன் இருந்துள்ளார்.

பிறகு அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் கத்தியால் குத்திய நபர் பிடிபட்டார். இவர் 53 வயதை சேர்ந்த சுஃபியான் முகமது சப்ரி ஆவார்.

குற்றவாளி மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆயுதத்தால் மரணத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திய நபருக்கு குற்றம் நிரூபணமானால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படவும், மேலும் திறம்படி வழங்கவும், அதோடு அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK