சிங்கப்பூரில் உள்ள உணவு மையத்தில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் உள்ள உணவு மையத்தில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூர்: புக்கிட் மெர்டாஜம் பிளாக் 115 இல் உள்ள ஒரு சந்தை மற்றும் உணவு மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த காணொளி பதிவானது sgfollowsall இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது.

அந்த காணொளி பதிவில் தீ விபத்து ஏற்பட்டதும் கடை முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டதும் தெரியவந்தது.

இது குறித்த செய்தியானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அதிகாரிகள் நேற்று (மார்ச் 26) காலை சுமார் 10:50 மணி அளவில் அங்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு பணியாளர்கள் தீயணைப்பு குழாய்களை பயன்படுத்தி தீயை விரைவாக அணைத்தனர்.

சாலையோரத்தில் உள்ள உணவு மையத்தின் சமையலறையில் இருந்து புகை வெளியேற்றும் அமைப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டிவி பதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

சமையலறையில் உள்ள புகை போக்கிக் குழாய்களில் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அங்கு சுற்றியுள்ள பகுதிகள் புகை போக்கிக் குழாய் திறப்புகளை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் அடுப்புகள் உள்ளிட்டவைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என்று இது போன்ற தவறுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கும் குறிப்பாக உணவகங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கும் அதிகாரிகள் நினைவூட்டி உள்ளனர்.

இதன் மூலமாக கொழுப்பு படிவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் மேலும் புகை போக்கிக் குழாய்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK