உட்லண்ட்ஸ் அவன்யூ 9 சந்திப்பில் ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. கிடைத்த தகவல்களின்படி தீப்பிடித்த கார் ஒரு பிஎம்டபிள்யூ (BMW) ஆகும்.
எஸ்ஜிஆர்வி ஃபிரண்ட் மேன் என்ற முகநூல் பக்கத்தில் நேற்று(ஏப்ரல் 7), இந்த சம்பவம் குறித்த காணொளிகள் பகிரப்பட்டுள்ளது. அந்தக் காணொளியில் சாம்பல் நிற காரின் முன் பக்கத்தில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் கருப்புப் புகை வெளியேறுவது தெரிகிறது.
இந்த காணொளி ஆனது வைரலாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த காணொளியில் சம்பவ இடத்தில் ஒரு தீயணைப்பு வண்டியும், தீயணைப்புப் பாதுகாப்பு உடைகள் அணிந்த குடிமைப் பாதுகாப்புப் படையினரும் தெரிகின்றன.
மேலும், குடிமைப் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பு, தீப் பற்றி எரியும் போது, காரை நோக்கி ஒருவர் தீயணைப்புக் கருவியை ஏந்தியபடி ஓடிச் என்று தீயை அணைக்கும் காட்சியும் அதில் தெரிகிறது.
ஹர் ஜித் சிங் அத்வால் என்பவரால் இந்த காணொளியானது முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 9 மற்றும் உட்லண்ட்ஸ் அவென்யூ 6 சந்திப்பில், ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 4:40 மணியளவில் ஒரு வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
SCDF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். இந்த கார் தீ விபத்தில் எந்த நபர்களுக்கும் காயம் ஏற்படவில்லை.