சாங்கி விமான நிலையம் அருகே பயங்கர விபத்து..!!

சாங்கி விமான நிலையம் அருகே பயங்கர விபத்து..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மரங்கள் நிறைந்த சாலையில் நேற்று (02.11.25) இரவு ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று கார்கள் சேதமடைந்தன.அதில் பின்புறம் கடுமையாக சேதமடைந்த கருப்பு நிற செடான் கார் ஒன்றும் அடங்கும்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது,இரவு சுமார் 9:05 மணிக்கு விமான நிலைய பவுல்வர்டு பகுதியில் விபத்து குறித்து தகவல் பெற்றதாக கூறியது.

அவர்கள் உடனே சம்பவ இடத்துக்கு சென்று, இரு நபர்களை மீட்டு சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டிக்டாக் பயனர் ஃபைட்லிமோ பகிர்ந்த காணொளியில், விபத்தில் குறைந்தது மூன்று வாகனங்கள் சிக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரு காரின் பின்புறம் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK