குண்டு காயங்களுடன் இறந்தவரின் உடல் மருத்துவமனையில் வீசப்பட்டுள்ளது!!

குண்டு காயங்களுடன் இறந்தவரின் உடல் மருத்துவமனையில் வீசப்பட்டுள்ளது!!

குண்டு காயங்களுடன் இறந்தவரின் உடல் மருத்துவமனையில் வீசப்பட்டுள்ளது!!

ஜூலை 3 நள்ளிரவு 12. 10 மணியளவில் ஜோகூர் பாரு மலேசியாவின் இஸ்கந்தர் புத்திரி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் முகமூடி அணிந்திருந்த நான்கு ஆடவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வெட்டு கத்தியுடன் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தை வழிமறிக்க முயன்றுள்ளனர்.

இந்த துணிச்சலான தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இதற்கு பதிலடியாக காரில் இருந்த பயணிகளில் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிய ஓடியதாகவும் கூறப்படுகிறது.

அவர்களில் மூன்று நபர்கள் மட்டும் தங்களின் வாகனத்தில் திரும்ப ஓடியுள்ளனர்.

நான்காம் நபர் மட்டும் தனியாக தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுல்தானா அமினா மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு துப்பாக்கி சூடுபட்ட ஒரு உடல் மருத்துவமனைக்கு வெளியே கிடப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனை ஜோகூர் காவல்துறை ஆணைய தலைவர் எம் குமார் உறுதிப்படுத்தினார்.

அது ஒரு ஆணின் சடலம் என்றும் அந்த ஆடவரின் நெஞ்சிலும் வயிற்றிலும் துப்பாக்கி குண்டுகள் தொலைத்திருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நாளில் மற்றொரு இடத்தில் மூன்று ஆண்டவர்களை கைது செய்துள்ளது மலேசிய காவல்துறை.

கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 40 வயது உடைய இரண்டு மலேசிய நாட்டை சேர்ந்தவரும் ஒரு இந்தியரும் ஆவார்.

மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan