சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது!
சிங்கப்பூரில் ஒரு வேனின் சரக்குப் பகுதியில் 4300க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிச்சுகளை மறைத்து வைத்துக்கொண்டு, நாட்டிற்குள் நுழைய முயன்ற மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (ஜூலை 29) முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியின்படி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த வேன் இந்த மாதம் 10ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடைமறிக்கப்பட்டுள்ளது.
அந்த வேனின் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் இருந்த பெட்டகங்களில் இருந்து 4300க்கும் மேற்பட்ட கார்ட்ரிட்சுகளையும் ஒரு மின்னணு சிகரட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக 31 வயதான மலேசியா ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு மேற்பட்ட விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு (HSA) அனுப்பப்பட்டுள்ளது.
இப்போது இது குறித்த விரிவான விசாரணையை சுகாதார அறிவியல் ஆணையம் நடத்தி வருகிறது. இதன் மூலம் இதன் பின்னணியில் உள்ள விநியோக நெட்வொர்க் கண்டறியப்படும் என்று நம்பப்படுகிறது.
குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), வர்த்தகம் மற்றும் மக்களை நடமாட்டத்திற்கு வழிவகுக்கும் அதே வேளையில் சிங்கப்பூரின் எல்லைகளின் பாதுகாப்பைப் பேணுவதில் தனது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.