சிங்கப்பூரில் தொடங்கியது திகில் திருவிழா..! 4 Horror Houses-உடன் களைகட்டும் “Festival of Thrills”!

சிங்கப்பூரில் தொடங்கியது திகில் திருவிழா..! 4 Horror Houses-உடன் களைகட்டும் “Festival of Thrills”!

சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா பகுதியில் பல்வேறு வயதினரையும், வெவ்வேறு அளவிலான சாகச விருப்பம் கொண்டவர்களையும் கவரும் வகையில் “Festival of Thrills” என்ற சிறப்பு நிகழ்ச்சித் தொடர் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குகள் முதல் Halloween திகில் அனுபவங்கள் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

கடல் சூழலியல் அருங்காட்சியகம் பகுதியில் “Into the Glowcean” என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியான் விளக்குகள் மற்றும் கலை அமைப்புகள் மூலம் கடலுக்குள் ஒளிரும் உலகம் போன்ற அனுபவம் உருவாக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களின் ஒளிரும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் Neon கலைஞர் ஃபூ கை சின் இந்தக் கலை அமைப்புகளை உருவாக்கியுள்ளார்.  

மேலும், செப்டம்பர் 19ஆம் தேதி இரவு 8 மணி முதல் 11 மணி வரை கடல் சூழலியல் முதன்முறையாக ‘Silent Disco’ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பங்கேற்பாளர்கள் Wireless Headphones அணிந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு நடுவே இசைக்கு ஏற்ப நடனமாடலாம்.

Adventure Cove Waterpark பகுதியில் குழந்தைகளும் பங்கேற்கும் வகையில் “Legend Keepers: The Ocean Spirit Awakens” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சிங்கப்பூரின் சகோதரி தீவுகள் மற்றும் செம்மலை உள்ளிட்ட பகுதிகளுடன் தொடர்புடைய உள்ளூர் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி மூலம் பணிகளைப் பெற்று நீர் பூங்காவுக்குள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் “Pool Party Panic” என்ற Mystery நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்கள் ஒரு விசாரணையாளராக மாறி, “கொலை” நடந்த இடத்தில் தடயங்களைத் தேடி, புதிர்களைத் தீர்த்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.

திகில் அனுபவத்தை விரும்புபவர்களுக்காக யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர் பகுதியில் ‘Halloween Horror Nights’ மீண்டும் நடைபெறுகிறது. செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு 4 Horror Houses அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளைப் போலவே சிங்கப்பூரின் பயமுறுத்தும் உள்ளூர் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திகில் அனுபவங்கள் இதில் இடம்பெறுகின்றன.

அவற்றில் ஒன்றான “Singapore’s Most Haunted: Live” என்ற Horror House, பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பழைய Studio ஒன்றை மையமாகக் கொண்டுள்ளது. அங்கு மீண்டும் Live நிகழ்ச்சி தொடங்கும்போது, சிங்கப்பூரின் பயமுறுத்தும் கதைகள் உயிர்ப்பெடுப்பது போன்ற அனுபவம் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மற்றொரு Horror House-ல் மேம்பட்ட Bioengineering மற்றும் Robotics Laboratory பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உயிர்சக்தியைப் பயன்படுத்தி செயற்கை அழிவில்லா வாழ்க்கையை உருவாக்க முயற்சிக்கும் ஆய்வகத்தில் ஏற்படும் குழப்பத்தை பார்வையாளர்கள் நேரடியாக அனுபவிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரில் பிரபலமான “கரங்குனி” கதாபாத்திரமும் திகில் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரவேற்பைப் பெற்ற சாட்டர்பாக்ஸ் சார்லியும் என்ற கதாபாத்திரமும் மீண்டும் இடம்பெறுகிறது. இந்த முறை அதற்கென தனி பேய் வீடு அமைக்கப்பட்டுள்ளது.

பேய் வீடுகள் மட்டுமின்றி, யுனிவர்சல் ஸ்டுடியோ சிங்கப்பூர் பகுதியில் ஆழ்ந்த திகில் அனுபவ மண்டபங்கள், அணிவகுப்பு பயமுறுத்தும் அனுபவங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

Festival of Thrills நிகழ்ச்சிகள் நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. குடும்பத்துடன் பொழுதுபோக்கு, Halloween அனுபவம் அல்லது திகில் சாகசம் என தங்களுக்கு ஏற்ற வகையில் பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து ரசிக்கலாம்.