சிங்கப்பூர் லிட்டில் இந்தியா MRT-யில் பரபரப்பு..!! Power Bank-ல் தீப்பிடித்ததால் 2 பேருக்கு பாதிப்பு..!!

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா MRT-யில் பரபரப்பு..!! Power Bank-ல் தீப்பிடித்ததால் 2 பேருக்கு பாதிப்பு..!!

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா MRT நிலையத்தில் பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு Power Bank-ல் தீப்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் செப்டம்பர் 10ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், 60 புக்கிட் திமா ரோட்டில் உள்ள லிட்டில் இந்தியா MRT நிலையத்தில் இடம்பெற்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

பிளாட்பாரத்தில் ஒரு பை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து தீப்பொறிகள் வெளியேறியதாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு இருந்த MRT நிலைய ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். ஊழியர் ஒருவர் தீ அணைப்பானைப் பயன்படுத்தி தீயை அணைத்ததால், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளார். மற்றொருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி வழங்கப்பட்டபோதும், அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த தீ விபத்து Power Bank காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தால் ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என SMRT தெரிவித்துள்ளது.

மின்னணு சாதனங்களை நீண்ட நேரம் யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Power Bank உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும்போது கூடுதல் கவனம் தேவை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.