சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்!!
சிங்கப்பூரில் முதிர்ந்த ஊழியர்களுக்கான பல்நிலை தொழில் முன்னேற்றக் கூட்டமைப்புடன் இணைந்து சுமார் 32 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூத்த பணியாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முன்னோடித் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பராமரிப்பு, உற்பத்தி, போக்குவரத்து, விருந்தோம்பல் மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இதில் அடங்கும்.
👉போக்குவரத்து துறை: டவர் ட்ரான்சிட் சிங்கப்பூர் (TTS) நிறுவனத்தில் 40%க்கும் அதிகமான பேருந்து ஓட்டுநர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்.மூத்த ஊழியர்களின் உடல் நிலைக்கு ஏற்ப புதிய பணி வழிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
60 வயது முதல் 69 வயது வரையிலான ஓட்டுநர்கள் தொடர்ந்து பேருந்து ஓட்டுவதோடு, மாற்றுப் பணியாக இன்டர்சேஞ்ச் அதிகாரிகளாகவும் சுழற்சி முறையில் பணியாற்றலாம்.
மூத்த ஓட்டுநர்கள் புதிய பணியாளர்களுக்குப் பாதைகளை அறிமுகப்படுத்தும் வழிகாட்டிகளாகவும் பாதுகாப்பு ஆலோசர்களாகவும் செயல்படலாம்.
👉நிதி மற்றும் மனிதவளத்துறை: DBS வங்கி நடுத்தர வயது மற்றும் மூத்த தொழில்துறை வல்லுநர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வங்கி துறையில் மறுபயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறது.
Adecco Personal (WISE திட்டம்) : இந்த முன்னாடி மனிதவள நிறுவனம் WISE என்ற பிரத்தியேகத் திட்டத்தின் மூலம் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்ந்த ஊழியர்களின் திறமைக்கேற்ப நெகிழ்வான பகுதிநேர பணிகளை நிறுவனங்களுடன் இணைத்து வழங்குகிறது.
👉உற்பத்தி துறை: செமிகண்டக்டர் மற்றும் ஆப்டிகல் தீர்வுகள் வழங்கும் உலகளாவிய நிறுவனமான ams OSRAM Singapore, மூத்த ஊழியர்களுக்குத் தொடர் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி, மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவர்களை தக்கவைத்துக் கொள்கிறது.
சிங்கப்பூர் மனித வள அமைச்சகம் (MOM) மூத்த ஊழியர்களைப் பகுதி நேரமாக மறுவேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க பகுதிநேர மறு வேலை வாய்ப்பு மானியம் வழங்கி வருகிறது.
இதன் மூலம் தகுதி உடைய நிறுவனங்கள் ஒரு மூத்த ஊழியருக்கு $2,500 வீதம் அதிகபட்சமாக 1,25,000 வரை நிதி உதவி பெற முடியும்.