சிங்கப்பூரில் வளர்ப்பு தந்தையை கொடூரமாக கொன்ற மகள்!
சிங்கப்பூரில் வளர்ப்பு தந்தையை கொடூரமாக கொன்ற மகள்!
செங்காங் ரிவர் டிரைவ், பிளாக் 190 இன் 15 வது மாடியில் உள்ள ஒரு யூனிட்டில் 32 வயது பெண் டான் கியு யான், தனது வளர்ப்புத் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அவரது வளர்ப்புத் தாய் நுரையீரல் புற்று நோயால் இறப்பதற்கு முன் அவர் வீட்டில் உரிமையில் பாதியை தனக்கு விட்டு செல்வதாக கூறியுள்ளார்.
அவரது தந்தையின் தந்தைக்கு பாதி உரிமை இருப்பதால் இருவருக்கும் இடையே பலமுறை சண்டை வந்துள்ளது.
தனது தாய் தந்தை இரண்டு பேரும் வாங்கிய வீடு என்பதால் தாய் இறந்தவுடன் வீட்டின் முழு உரிமையும் தந்தைக்கு வந்து விட்டது என்பதை தெரிந்து கொண்டார்.
தனது தந்தையை அவருடைய பெயரையும் உரிமையாளர் பட்டியலில் சேர்க்குமாறு பலமுறை சண்டையிட்டுள்ளார்.
இறுதியில் தனது வளர்ப்பு தந்தையை 40 முறைக்கு மேல் வெட்டிக் கொன்று விட்டார் அவர் மூச்சு விடுவதை நிறுத்தி விட்டார் என்று அறிந்த பிறகு தனது கத்தியை கழுவி வைத்து விட்டு தனது உடையையும் மாற்றிக் கொண்டு விடியும் வரை காத்திருந்துள்ளார்.
முதலில் அவர் சரணடைய காவல் நிலையம் செல்ல தயாராகி உள்ளார்.
பிறகு யோசித்து காவலர்களை தனது தந்தை இறந்து விட்டதாக சொல்லி அழைத்துள்ளார் காவலர்கள் வந்தபின் சம்பவ இடத்திலேயே அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் தனது கொலை குற்றத்தை ஒத்துக் கொண்டுள்ளார்.