அமெரிக்க முக்கிய தலைவர்களுடன் சிங்கப்பூர் துணை பிரதமர் ஆலோசனை..!!

அமெரிக்க முக்கிய தலைவர்களுடன் சிங்கப்பூர் துணை பிரதமர் ஆலோசனை..!!

சிங்கப்பூரின் துணை பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 15) அவருடைய பயணத்தின் மூன்றாவது நாளாகும்.

திரு கான் அவர்கள் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநில தலைவர்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் சந்தித்து பேசி உள்ளார்.

உலகப் பொருளாதாரச் சூழல், தடையில்லாமல் இணைப்புடன் சந்தைகளை வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து இவர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.

எதிர்காலத்தில் இரண்டு நாடுகளிலும் வலுவான தொழில் துறை நீடித்த வளர்ச்சியில் நல்ல வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்தனர்.

விரைவில் திரு கான் அவர்கள் வாஷிங்டனில் தலைவர்களை சந்தித்து பேசுவார் என தெரியவந்துள்ளது.

திரு கான் அவர்கள் நாளை மறுநாள் (ஏப்ரல் 17) வரை அமெரிக்காவில் இருப்பார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK