பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!ஏப்ரல்15 முதல் ஆரம்பம்..!!

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! ஏப்ரல்15 முதல் ஆரம்பம்..!!

சிங்கப்பூரில் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) நேற்று (ஏப்ரல் 15) முகநூல் பதிவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலநிலை நட்பு குடும்பங்கள் திட்டத்தில் இரண்டு புதிய பிரத்தியேக தயாரிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கான வவுச்சர்களை, பொதுமக்கள் அரசாங்கத்தால் முன்னர் வழங்கப்பட்ட காலநிலை கூப்பன்களை பயன்படுத்தி இதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆற்றல் திறன் மிக்க சாதனங்களை வாங்குவது மின்சார நுகர்வையும் பயன்பாட்டு கட்டணங்களையும் குறைப்பதோடு மட்டுமல்லாது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காகவும் இது முக்கிய பங்கு வகிக்கும்.

தற்போதுள்ள ஆற்றல் திறன் மற்றும் நீர் சேமிப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்களுடன் கூடுதலாக பொதுமக்கள் ஒரு புதிய காலநிலை வௌச்சர்களை பயன்படுத்தி கையடக்க மற்றும் உள் அமைக்கப்பட்ட மாடல்கள் போன்ற இன்டக்ஷன் அடுப்புகளையும் ஆற்றல் திறனுக்கான 5Star கொண்ட துணி காய வைக்கும் இயந்திரத்தையும் வாங்கலாம்.

கல்வி நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மூத்த இணை அமைச்சர் டாக்டர் புஜாத், மார்ச் 3 அன்று நிலைத்தன்மை அமைச்சகத்தினுடைய வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் நடைபெற்ற போது இந்த திட்டம் தற்போதுள்ள 10 பொருட்களில் இருந்து 12 பொருட்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK