சிங்கப்பூரில் முதல் முறை நடந்த சோகச் சம்பவம்..!!! காரணம் இதுவா..??

சிங்கப்பூரில் முதல் முறை நடந்த சோகச் சம்பவம்..!!! காரணம் இதுவா..??

சிங்கப்பூர் 2022 ஆம் ஆண்டு சிலேத்தார் விரைவு சாலையில் அதி பயங்கர விபத்து ஒன்று நடந்தது.

இந்த விபத்தில் 6 கார்கள் சிக்கியது.

5-வதாக மோதிய 57 வயதைச் சேர்ந்த மைக்கல் ஓங் கொங் மெங் என்பவர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீதமுள்ள கார் ஓட்டுநர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

காரணம்: மற்றும் கார்களை காட்டிலும் திரு ஓங் இயக்கிய கார் மீதான தாக்கம் அதிகமாக இருந்தது.

சிங்கப்பூரில் இதுவே Takata Airbag சம்பந்தப்பட்ட முதல் மரணமாகும்.

திரு ஓங் ஓட்டிய Honda காரை இறக்குமதி செய்து Hong Sin Motors நிறுவனம் விற்றது.

2013ஆம் ஆண்டு காற்று பையில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உலகெங்கும் இந்த கார்கள் மீட்டுக்கொள்ளப்பட்டது.

இதுவரை இந்த காற்றுப்பை கொண்ட 1,98,000 வாகனங்கள் சிங்கப்பூரில் மீட்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் Hong Sin Motors நிறுவனமானது செயல்பாட்டில் இல்லை.

விபத்திற்கு பிறகு திரு ஓங்கிற்க்கு சொந்தமான காரை மீட்டுக்கொள்ளவில்லை என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

திரு ஓங் இயக்கிய காரை நிறுவனத்திடம் நேரடியாக வாங்காமல் பலரிடம் கைமாற்றப்பட்ட காராக அவரிடம் விற்கப்பட்டது.

அவரது காற்றுப்பை(Airbag) வெளியேறிய போது திருப்பு சக்கரத்தில் (Steering wheel) உள்ள ஒரு உலோகப் பொருள் அவரது தலையில் மோதியதால் ஓட்டுநர் இறந்தார்.

இதுகுறித்து விசாரணை பின்னர் நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK