மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

வங்காளதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு தந்தை தனது குழந்தை ரயிலில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் போது அக்குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதைத்தொடர்ந்து ரயில் நகரத் தொடங்கி மெதுவாக நிலையத்தை விட்டு நகர்ந்து சென்றது.

இதனால் அந்த தந்தை தண்டவாளத்தின் மீது குறித்து தன் குழந்தையைப் பாதுகாக்க குனிந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு மேலே 8 ரயில் பெட்டிகள் கடந்து சென்றுள்ளன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் அந்த நிகழ்வில் உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்த காணொளிக் காட்சி ஆனது இந்தியாவின் பொது தில்லி தொலைக்காட்சி நிலையம் ஆன NDTV -யில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமானதால், ரயில் மீண்டும் நகர தொடங்கியப் போது தந்தை குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி ரயிலில் இருந்து இறங்கியுள்ளார். ஆனால் அந்த குழந்தை அவரது கைகளில் இருந்து நலுவி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையேயான இடைவெளியில் விழுந்து சிக்கி உள்ளது.

தந்தை உடனடியாக யோசிக்காமல் தண்டவாளத்தில் குதித்து குழந்தையை இறக்கமாக பிடித்துக்கொண்டு பாதுகாப்பிற்காக சுவரைக் கட்டிக் கொண்டுள்ளார். 8 ரயில் பெட்டிகள் மேலே கடந்து சென்றபோதும் இருவரும் பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பி உள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு இருந்த பயணிகள் குழந்தையின் தாய் பாதுகாப்பாக ரயிலில் இருந்து இறங்க உதவி செய்துள்ளனர்.

ரயில் சென்ற பிறகு, அங்குள்ள மக்கள் தந்தையையும் மகனையும் காப்பாற்ற விரைந்து வந்தனர். மேலும் தந்தையின் இந்த செயலுக்காக அவரைப் பாராட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அதனை கண்ட பல இணையவாசிகள் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அவர் காட்டிய தைரியத்தையும் நிதானத்தையும் பாராட்டி அவரை ஒரு “நாயகன் ” என்று விமர்சித்து உள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK