MTI-இன் 3 நிறுவனங்களில் இயக்குநர் குழு மறுசீரமைப்பு..!!
சிங்கப்பூர் : வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பதவி மாற்றங்கள் இன்று (மே 1) நடைபெற்றுள்ளது.
பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB), எண்டர்பிரைசஸ் சிங்கப்பூர் (ESB) மற்றும் ஜூராங் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் குழுக்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
EDB தலைவர் ஃபாங் ஜாங்கவன், EDB வாரியத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது.
என்டர்பிரைசஸ் சிங்கப்பூர் நிறுவனத்தை பொறுத்தவரை தற்போதைய இயக்குநர் லீ குவான் டே அவர்களை சிங்கப்பூர் வாரியத்தின் தலைவராகத் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.
ஜூராங் நிறுவனத்தைப் பொறுத்தவரைப் போக்குவரத்து துறையின் அதாவது நிலம் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தின் துணை நிரந்தர செயலாளராக லியு வென்பினை புதிய இயக்குநராக MTI நியமித்துள்ளது
லியு வென்பின் 1990 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்தார். அவர் ஒரு தகுதி வாய்ந்த ஹெலிகாப்டர் விமானியாகவும் பணிபுரிந்தவர். மேலும் விமானப்படையில் பல்வேறு கட்டளை மற்றும் பணியாளர் பதவிகளில் பணியாற்றி, பிரிகேடியர் ஜெனரல் பதவி வரை பதவி ஆற்றியவர்.
தற்போது நிலப் போக்குவரத்து தொடர்பான தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கும், தொழில்நுட்பக் கொள்கைகளை வகுப்பதற்கும், போக்குவரத்து அமைச்சகத்தின் ஒட்டுமொத்த தொழில்நுட்பத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கும் தலைமை தாங்குவதற்கு இவர் சிறந்த பொறுப்பாளராக இருப்பார். போக்குவரத்து அமைச்சகத்தின் மூலோபாயத் தகவல் தொடர்புகளுக்கும் லியு வென்பின்னே பொறுப்பு எனவும் MTI குறிப்பிட்டுள்ளது.