ATM இயந்திரங்களுக்குள் Tissue தாள்..!! 37 வயது நபர் மீது குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூரில் ATM இயந்திரங்களுக்குள் Tissue தாளை நுழைத்த சந்தேகத்தின் பெயரில் 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் (ஏப்ரல்) 27ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை பல ஏடிஎம் (ATM) வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாக தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதனை எடுத்து காவல்துறையினர் இது குறித்த விசாரணையை மேற்கொண்டனர். அதில் ஒரு பகுதியாக கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒரு நபர் வங்கி அட்டையின் அடியில் Tissue தாளை வைத்து இயந்திரத்தினுள் செலுத்தியது தெரியவந்துள்ளது.
இதுவே இயந்திரக் கோளாறுக்கு காரணம் என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
பொதுச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.