சிங்கப்பூரில் சலவை கடையிலிருந்து துவைத்த துணிமணிகளை தினசரி வரும் வாடிக்கையாளர் ஒருவர் திருடிய சம்பவம் குறித்த காணொளி பதிவானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளி பதிவில், நள்ளிரவு நேரத்தில் ஒருவர் சலவை இயந்திரத்தில் உள்ள துணிமணிகளை எடுத்து தள்ளு வண்டியில் போட்டு அதை எடுத்துக்கொண்டு கிளம்பினார் என்பது பதிவாகியுள்ளது.
இதுகுறித்த காணொளி பதிவானதை கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்ததை அடுத்து உரிமையாளர் காவல்துறையிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்.
மேலும் கடை உரிமையாளர் இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளார். திருடிய நபர் வாடிக்கையாளர் எனவும் அவர் பொதுவாக அதிகாலையில் என்னுடைய கடைக்கு அடிக்கடி வருவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.