“காயமடைந்த பூனை துன்புறுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை”- தேசிய பூங்காக் கழகம்

சிங்கப்பூர்:பொங்கோலில் காயமடைந்த பிறகு இறந்த பூனை, துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தேசியப் பூங்காக் கழகம் (NParks) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை விலங்குவதை என சந்தேகிக்கப்படும் வழக்காக விசாரித்து வருவதாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.
பொங்க்கோலில் உள்ள Sumang Walk புளோக் 326B இல் ஒரு பூனை காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை (மே 12) காயமடைந்த பூனை பற்றிய தகவல் கிடைத்ததாகவும், அது மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் விலங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
கால்நடை மருத்துவரின் அறிக்கையின்படி, விசாரணையில் பூனை துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
பூனையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அது சாலையோரத்தில் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
காயங்கள் காரணமாக பூனை மருத்துவ நிலையத்தில் கருணைக்கொலை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது.
பூனையை முதலில் கண்டுபிடித்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில், பூனை ஒரு வாகன விபத்தில் காயமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan

