இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன??

இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் முழுவதுமாக கம்பி வலையில் போடப்பட்ட லாரிகளுக்கு 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும் என்று போக்குவரத்து தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷூவெலிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 4ஆம் தேதி) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது மக்கள் நலன் சார்ந்த போக்குவரத்து அமைப்பாக திகழ்கின்ற அமைச்சின் இலக்குகள் பற்றி உரையாற்றிய நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

என்ன காரணம்?
இந்த வாகனத்தில் தங்கும் இடத்திற்கும் வேலை இடத்திற்கும் இடையிலான ஊழியர்கள் அனைவரையும் ஏற்றிச்செல்லும் நடைமுறை இருந்தது.

ஊழியர்களின் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தொழில் துறையினருடனும் அரசு சாரா அமைப்புகளுடனும் அணுக்கமாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ள துணை அமைச்சர் இதில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரிகளில் மேற்கூரை உயரமான பக்கவாட்டு பாதுகாப்பு தடுப்புகள் பொருத்துவது, குறைந்தபட்ச இட வசதி தேவைகளை பூர்த்தி செய்வது, மற்றும் குறைவான வேக வரம்பு உள்ளிட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது அமைச்சகம் கண்டுள்ள முன்னேற்றங்களில் இதுவும் சில என்று துணை அமைச்சர் கூறினார்.

வாகனத்தை தவிர்த்தது ஏன்?
வெளியே பூட்டப்பட்ட அல்லது தாழ் இடப்பட்ட முழுவதும் கம்பி வளைகளால் ஆன கதவை கொண்ட லாரி அதிகமாக விபத்துக்கு உள்ளானாலோ தீப்பற்றினாலோ அதில் உள்ள ஊழியர்களால் தப்பிக்க முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கம்பி வலைகள் போடப்பட்ட லாரிகளின் பின்புறத்தில் அமர்ந்து செல்வது மற்றும் அதில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த கடும் அபாயங்களையும் ஏற்படுத்துகின்றன என்பது குறித்தும் சுட்டிக்காட்டி இருந்தார்.

இருப்பினும் இத்தகைய லாரி வகைகளை நிறுவனங்கள் சரக்குகளை ஏற்றி சல்ல பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் தெரிவித்தார்.

நிறுவனங்கள் தங்கள் லாரிகளின் பின் தளத்தில் ஊழியர்களையோ சரக்குகளையும் ஏற்றிச் செல்ல அதற்கேற்ற வசதி தேவைப்பட்டால் கம்பி வலைகளுக்கு பதிலாக மாற்று வழியாக மேற்கூரை பக்கவாட்டு தடுப்புகள் மழை நீர் புகாத தடுப்புகளை பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK