சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!!

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!!

சிங்கப்பூர்: இந்த ஆண்டின்(2025) முதல் ஆறு மாதங்களில் வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரவுகள் காட்டுகின்றன.

வயதான பாதசாரிகள் விபத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18.4 விழுக்காடு அதிகரித்து 116 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் 15 வயதை உடைய பாதசாரிகள் போக்குவரத்து விபத்தின் காரணமாக இறந்துள்ளனர்.

இது கடந்த ஆண்டு(2024) ஒப்பிடும்போது போக்குவரத்து விபத்து இறப்பிற்கான விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

விபத்துகளில் காயம் அடைந்த வயதான பாதசாரிகளின் எண்ணிக்கையும் கிட்டதட்ட 10 விழுக்காடு (9.8%) அதிகரித்து 92 இல் இருந்து 101 ஆக அதிகரித்துள்ளது.

வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளிலும் 40 விழுக்காடு 43.1% க்கும் அதிகமானவை ஜெய்வாக்கிங் காரணமாக ஏற்பட்டவை ஆகும்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்துக்கள் சுமார் 10 விழுக்காடு (9.5%) அதிகரித்து 2,088 ஆக உயர்ந்துள்ளது.

சென்ற ஆண்டு(2024) மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களின் இறப்பு எண்ணிக்கை 44 இல் இருந்து 43 ஆக குறைந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு (2025) அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 54.4 விழுக்காடு ஆகும்.

விபத்துகளில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 7.3% அதிகரித்த 2,323 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்துகளில் அதிகப்படியாக (54.7%) மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வாகும்.

சாலை நிலைமைகள் குறித்து சரியான கவனம் செலுத்த தவறியது, மோசமான மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடு மற்றும் கவன குறைவான பாதை மாற்றங்கள் மூலமே இந்த போக்குவரத்து விபத்து இறப்புகள் இரட்டிப்பாகியுள்ளது.

அனைத்து பாடசாலை இறப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 விழுக்காடு (78.9%) ஆக உயர்ந்துள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan