சிங்கப்பூர்: கெப்பல் பே பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) முதலைகள் காணப்பட்டதை அடுத்து கெப்பல் பே வாட்டர் ஃப்ரண்ட் கிளப் பகுதியில் முதலைகள் காணப்பட்டதை அறிந்ததாகவும் காணப்பட்ட முதலை இனம் பெரும்பாலும் ஜோகூர் ஜல சந்தி மற்றும் சிங்கப்பூர் ஜல சந்தியில் காணப்படுகின்ற முதலாக இருக்கலாம் என தேசிய பூங்காக்கள் வாரியம் நேற்று (ஏப்ரல் 30) தெரிவித்துள்ளது.
தேசிய பூங்கா வாரியம் முதலில் இருக்கும் இடங்களை தற்போது உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தண்ணீருக்கு அருகில் இருக்கும் போது அல்லது நீர் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 29 படகு உரிமையாளர்களுக்கு மின்னஞ்சலில் இது குறித்த செய்தி அனுப்பிய நிலையில் அலை தடுப்பு நுழைவாயிலின் வளைவில் மாலை 6:20 மணி அளவில் முதலைத்தளங்கள் காணப்பட்டதாக மெரினா கெப்பல் பே கிளப் தெரிவித்துள்ளது.
அனைவரும் தற்காலிகமாக நீர் நடவடிக்கைகளில் இருந்து சற்று விழிப்புடன் இருக்குமாறு கெப்பல் பே கிளப் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் முதலைகள் இறையை வேட்டையாடுவதற்காக தண்ணீருக்கு வெளியே செங்குத்தாக பாய நேரிடும் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததால் மிதவை பாலத்தில் நடக்கும் போது ஓரங்களை தவிர்த்து நடுவில் நடக்குமாறு கிளப் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. ஒரு முதலை தென்பட்டால், உடனடியாக கிளப் ஊழியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூர் கடல் பகுதிகளில் இதற்கு முன்பாக கடல் முதலைகள் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் செந்தோசா கடல் பகுதிகளில் முதலைகள் காணப்பட்டதாகவும் அதன் காரணமாக மூன்று கடற்கரைகளில் நீச்சல் மற்றும் கயாக்கிங் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.