தீ விபத்திற்குக் காரணம் PMD பேட்டரியா?

தீ விபத்திற்குக் காரணம் PMD பேட்டரியா?

சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் மாதம்) 13ஆம் தேதி ஜாலான் மேரா HDB அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக் 106 இல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

நேற்று மாலை 4 மணியளவில் ஜாலான் மேராவில் உள்ள 106 வது பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் பிரிவின் சமையலறையில் ஒரு ஆணும் பெண்ணும் மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதை கண்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து அனுப்பி விட்டனர்.

 

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இறந்த இருவரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு சம்பவம் நடந்த பிரிவுக்குச் சென்ற ஒரு தம்பதியினர் எனவும் தகவலைத் தெரிவித்தனர்.

Living room இல் இருந்த தனிப்பட்ட PMD பேட்டரி பேக்கினால் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் நீண்ட நேரம் பேட்டரிகள் அல்லது சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டாம் அல்லது இரவு முழுவதும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்றும் சிவில் பாதுகாப்புப் படை சமீபத்திய தகவல்களை வழங்கும் பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan