LTA அறிவித்த புதிய முயற்சி என்ன? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்
இந்த ஆண்டு 2025, ஏழு பொது போக்குவரத்து நிறுவனங்களுக்கு பேருந்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் சிறந்த பாதுகாப்பு பதிவுகளை இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
304 பொதுப்போக்குவரத்து பணியாளர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் பிற சாலை பயனர்களுக்கு உதவ விரைவான நடவடிக்கை எடுத்தற்காக 58 போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு பாராட்டுகளை பெற்றனர்.
மேலும் போக்குவரத்து அமைப்பில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த புதிய கருவிகள் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை உருவாக்கிய காரணத்திற்காக 246 பேர் நட்சத்திர விருதுகளையும் பெற்றுள்ளனர்.
நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)இந்த ஆண்டு 2025 ஒரு புதிய முயற்சியை அறிவித்துள்ளது.
சிறந்த விருது வென்றவர்களின் பெயர்கள் எம்.ஆர்.டி பேருந்து மற்றும் பாய்ண்ட்-டு-பாய்ண்ட் பேருந்து பிரிவுகளுக்கான சவால் கேடயங்களில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 வருட காலத்தில் அதிக விருதுகளை பெற்ற ஆபரேட்டர்கள் பாதுகாப்பிற்கான அவர்களின் உறுதிப்பாட்டின் அடையாளமாக சவால் கேடயத்தை இதன் மூலம் தக்கவைத்துக் கொள்வார்கள் என அறிவித்துள்ளது.