சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!!

சிங்கப்பூரில் நாயின் மருத்துவ செலவிற்காக $1200 கேட்ட பெண்..!!

சிங்கப்பூரில்  மார்ச் 25 ஆம் தேதி அவரது உரிமையாளரின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்ற போது, ஒரு பெரிய நாய் இந்த சிறிய நாயை (சச்சா )தாக்கியுள்ளது.

பெரிய நாய் தாக்கியதில் அந்த சிறிய நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.நாயின் உரிமையாளரான ஜாஸ்மின் என்பவர் நாயின் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

நாயைப் பரிசோதித்த மருத்துவர்கள் இந்த சிறிய நாய்க்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தையல் போட வேண்டும் என்று கால்நடை அவசர மற்றும் பரிந்துரை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடித்த அந்த பெரிய நாயின் உரிமையாளரைக் கண்டுபிடித்த ஜாஸ்மின் நடந்ததை கூறி, தனது நாயான சாச்சாவிற்கு மருத்துவ செலவுகளுக்காக $1200 வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சில கலந்துரையாடல்களுக்குப் பிறகு அனைத்து மருத்துவச் செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக அந்த பெரிய நாயின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜாஸ்மின் என்பவர் இது வெறும் பண பிரச்சனை மட்டுமல்ல, பொறுப்புணர்வு சார்ந்த விஷயமும் கூட என்று இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

நாயின் உரிமையாளர்கள் தங்களது செல்லப்பிராணிகளை அழைத்து செல்லும்போது, அவைகளைக கட்டுப்படுத்தும் வகையில் கயிற்றால் கட்டி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து, காவல்துறையின் அறிவுறுத்தலின்படி தேசிய பூங்காக்கள் வாரியத்தின் விலங்கு மற்றும் கால்நடை சேவைகளிடம் (AVS) சச்சாவின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK