சுங்காய் கடுட்டில் தொடரும் தீ விபத்து..!!20 வயது இளைஞன் கைது..!!

சுங்காய் கடுட்டில் தொடரும் தீ விபத்து..!!20 வயது இளைஞன் கைது..!!

சிங்கப்பூரில் தொடர்ந்து ஒரு வாரமாக சுங்காய் கடுட்டை(Sungai Kadut) சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தானது 56 சுங்காாய் காடுட் டிரைவ், 51 சுங்கை காடுட் ஸ்டிரீட் 1மற்றும் 8 சுங்கை காடுட் கிரெசண்ட் ஆகிய இடங்களில் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை ஆய்வு செய்ததில் இந்த விபத்து இயற்கையாக நடக்கவில்லை என்பதை கண்டறிந்தனர்.

மேலும் இந்த விபத்திற்கு பின்னால் 20 வயதுள்ள இளைஞன் ஒருவன் இருப்பதாக சந்தேகிகப்பட்டு கைது செய்தனர்.

அந்த இளைஞரிடம் விசாரணை செய்ததில் இதை அவர் வேண்டுமென்றே செய்ததாக தெரிய வந்துள்ளது.

காவல்துறை இச்சம்பவம் குறித்து கூறியதாவது,
       தீ விபத்து ஏற்பட்ட இரண்டு இடங்களுக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் வந்து தீயை அணைத்ததாகவும், தீ விபத்து ஏற்பட்ட மற்றொரு இடத்தில் பொதுமக்களே தீயை அணைத்ததாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK