சிங்கப்பூரில் மர்மமாக இறந்து கிடந்த 23 வயது இளைஞர்..!! விசாரிக்கும் அதிகாரிகள்..!!

சிங்கப்பூரில் மர்மமாக இறந்து கிடந்த 23 வயது இளைஞர்..!! விசாரிக்கும் அதிகாரிகள்..!!

சிங்கப்பூர்: பிளாக் 350 யிஷூன் அவென்யூ 11ன் கீழ் தளத்தில் நேற்று (ஏப்ரல் 28) காலை 6:00 மணி அளவில் 23 வயதை சேர்ந்த இளைஞர் இறந்து கிடந்தது குறித்து ஈஷியா ஒன் இணையதளம் மூலம் தெரிய வந்தது.

இந்த தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் காலை 7:40 மணியளவில் சென்று பார்த்தனர்.

இறந்து கிடந்த இளைஞர் வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பில் வசித்தவர் எனும் குடியிருப்பாளர்கள் கூறியது காவல்துறை மூலம் தெரியவந்தது.

வீடமைப்பு வளர்ச்சி கழக கட்டிடத்தின் தரைத்தளத்தில் காவல்துறைகள் அதிகாரிகள் தடுப்புகளை அமைத்து அருகில் உள்ள புல்வெளியில் காவல்துறையின் நீல நிற கூடாரம் காணப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இறந்த ஆடவர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக இருக்கலாம் எனவும் அந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் அவர் அசைவின்றி காணப்பட்டதாகவும் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரும் தெரிவித்துள்ளனர்.

சமூக இடத்திலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின் போது இந்த சம்பவம் தொடர்பில் மர்மம் இருப்பதாக எதுவும் சந்தேகிக்கப்படவில்லை என காவல்துறை கூறியுள்ளது.

ஆனால் இறந்தவரின் மரணம் இயற்கைக்கு மாறானதாக இருக்கும் என நினைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வாரத்தில் யிஷூனில் நிகழ்ந்த இது போன்ற மர்மமான சம்பவம் இரண்டாவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த திங்கட்கிழமை அன்று பிளாக் 638 யிஷூன் தெரு 61வது கீழ் தளத்தில் 24 வயது சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் ஒருவர் இறந்து கிடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK