மெக்சிகோ நகரில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்திலும் மெக்சிகோவின் மேற்கு பசிபிக் கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய புயல்கள் உருவாகி அப்பகுதி முழுவதும் கனமழை ஏற்பட்டு வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
இதனால் பெரும்பாலான இடங்களில் பல நிலச்சரிவுகளும் மின்தடைகளும் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஆறுகள் முழுவதும் நிரம்பி வழிந்து ஓடியது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிலைமையை கண்காணிக்கவும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை சுத்தப்படுத்தவும் 5,400க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளதாக மெக்சிகோவின் தற்காப்பு அமைப்பு கூறியுள்ளது.
அவசரகால மீட்பு படையினர் முழங்கால் அளவுள்ள வெள்ள நீரில் மீட்பு பணிகளில் ஈடுபடும் படங்களை மெக்ஸகோ அதிபரான கிளோடியா ஷைன்பவும் அவரின் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.