சிங்கப்பூரில் 27 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் 27 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் பழைய விமான நிலைய பகுதியில் இருக்கும் தனியார் குடியிருப்புகளுக்குள் நேற்று பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 6:32 மணிக்கு 27 வயதைச் சேர்ந்த நபர் ஒருவர் நுழைந்து உடைத்துள்ளார். இது கறித்து தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையின் போது இந்த நபர் ஜன்னல் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக தெரியவந்தது மேலும் இந்த சம்பவத்தில் எந்த ஒரு விலைமதிப்புள்ள பொருட்களும் திருடப்படவில்லை என்பது உறுதியானது.

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த நபரை காவல்துறையினர் நாளை (பிப்ரவரி 28ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவர். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுமக்களுக்கு காவல்துறை கூறியதாவது:
👉பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் குடியிருப்பில் உள்ள அனைத்து ஜன்னல்கள் கதவுகள் மற்றும் நுழைவாயில்களை நல்ல பாதுகாப்பு கம்பிகள் மற்றும் வெயிட் லாக்களால் பாதுகாப்பாக பூட்டப்பட்டுள்ளது உறுதி செய்து கொள்ள வேண்டும்.
👉 பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை வீட்டிற்குள் வைத்திருத்தலை தவிர்த்தல் அவசியம்.
👉 மோஷன் சென்சார் விளக்குகள் அல்லது சிசிடிவி கேமராக்களை பொருத்தி அவை சரியாக செயல்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல் அவசியமாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK